மெக்சிகோவில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழப்பு
#Mexico
#GunShoot
#Death
#Police
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 7 வயது சிறுவன், 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்



