ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உயர்ந்து நிற்கும் சூரி

#soori #vetrimaaran #Actor #Director #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
2 years ago
ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உயர்ந்து நிற்கும் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இதுவரை காமெடியனாக கலக்கி வந்த சூரி இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

அதனாலேயே இதன் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நாம் எதிர்பாராத பல சஸ்பென்ஸ்கள் இருக்கும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் விடுதலை படத்தை தொடர்ந்து சூரிக்கு அடுத்தடுத்த ஹீரோ வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் வெளிவந்த இந்த அறிவிப்பை தொடர்ந்து சூரி இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டார் என்று பலரும் கூறி வந்தனர். அதற்கேற்றார் போல் இப்போது அவருடைய கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கிறதாம்.

அந்த வகையில் அவர் நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ளார். ஆனால் இந்த முறை அவருடைய இயக்கத்தில் இல்லாமல் கதையில் சூரி நடிக்கப் போகிறார். அதாவது வெற்றிமாறன் எழுதியிருக்கும் கதையை துரை செந்தில்குமார் இயக்க இருக்கிறார்.

விடுதலை படத்திற்காக சூரி எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பதை வெற்றிமாறன் பல பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. அந்த வகையில் சூரி, வெற்றிமாறனை கெட்டியாக பிடித்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து சூரி முன்னணி இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம். அதில் அமீர் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சூரிக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!