நாளை கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு

#Train #Colombo #people #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
நாளை கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் நாடு திரும்புவதற்காக நாளை (17) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இன்று (16) மேற்கொள்ளப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இதேவேளை, இன்று சுமார் 30 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடுமுறையில் இருந்த ரயில் சாரதிகள் குழுவொன்று பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பல பிராந்திய ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதன் காரணமாக பயணிகளுக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என மேலதிக புகையிரத பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!