வாகன விபத்தில் சிக்கியுள்ள அமைச்சர் சியம்பலாபிட்டிய
#Accident
#Ranjith Siambalapitiya
#Hospital
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

கேகாலை, அவிசாவளை பிரதான வீதி, ருவன்வெல்ல, வந்தல பிரதேசத்தில், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த சொகுசு ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது, இராஜாங்க அமைச்சர் உட்பட 5 பேர் வாகனத்தில் இருந்தனர்.
இந்த விபத்தில் சியம்பலாபிட்டியவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறு காயம் காரணமாக ராஜாங்க அமைச்சர் தற்போது கரவனெல்ல ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் வீட்டின் அருகே ஜீப் சாலையை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.



