அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு-ரஞ்சித் பண்டார
Prabha Praneetha
2 years ago

இவ்வருடம் அனைத்து அரச நிறுவனங்களையும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி 420 அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் அரச நிறுவனங்களை வருடாந்தம் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்க வேண்டியிருந்தாலும் அது உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



