மத்திய வங்கியின் 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் 15 உத்தியோகத்தர்களிடம் விசாரணை

#Central Bank #money #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Investigation #Police
Prathees
2 years ago
மத்திய வங்கியின் 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில்  15 உத்தியோகத்தர்களிடம் விசாரணை

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தின் பாதுகாப்பான வைப்புப் பெட்டியில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் கோட்டை பொலிஸார் பண அறங்காவலர் சபையின் 15 உத்தியோகத்தர்களிடம் நீண்ட நேரம் விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

மத்திய வங்கியின் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான பணம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், 50 இலட்சம் ரூபா பணத்தை யாரேனும் திருடிச் சென்றார்களா அல்லது பணத்தை விடுவிப்பதில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதா என்பது இதுவரையில் தெரியவரவில்லை.

இந்த பணம் வைப்பு செய்யப்பட்ட மத்திய வங்கியின் மூன்றாவது மாடியில் உள்ள சேமிப்பு அறை அதியுயர் பாதுகாப்பு முறைகளின்படி தயாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாது எனவும், பண அறங்காவலர் குழுவின் 15 அதிகாரிகளுக்கே அங்கு செல்ல முடியும் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பணப் பெட்டகம்  இருந்த மூன்றாவது மாடியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பொலிசார் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பணம் அனைத்தும் மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் வழங்கப்படவிருந்த பணத்தில் 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளது.

11ஆம் திகதி இந்தப் பணம் காணாமல் போன போது மத்திய வங்கியின் இந்த நிலத்தடி பணப் பெட்டகத்திலிருந்து 25 மில்லியன் ரூபா பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று மதியம் நிதி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, மத்திய வங்கியும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும், மத்திய வங்கி வழங்கப்பட வேண்டிய பணத்தை மீண்டும் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!