விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

#Flight #world_news
Mani
2 years ago
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

தலைநகர் டெல்லியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் பஹ்தோரா நகருக்கு இன்று மதியம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

விமானத்தில் இருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த பைலட் உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து, பயணிகள் மாற்று விமானம் மூலம் மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுவானில் தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!