தற்காலத்தில் அனைவருக்கும் ஏற்படும் மேல் முதுகுவலிக்கான காரணமும் சிகிச்சையும்.

#ஆரோக்கியம் #உடல் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Body #Antoni #Theva #Antoni Thevaraj
தற்காலத்தில் அனைவருக்கும் ஏற்படும் மேல் முதுகுவலிக்கான காரணமும் சிகிச்சையும்.

ஒருவருக்கு சாதாரணமாக முதுகுவலியை தாங்க முடியாது. அதிலும் மேல் முதுகு வலி என்றால் இன்றும் வலியை ஏற்படுத்தும். இன்றைய பதிவில் நாம் பார்க்கவிருப்பது மேல் முதுகுவலி யார் யாருக்கு அதிகம் வரும் என்பதையும் அதற்கான காரணங்களையுமாகும்.

முதுகு வலி காரணம்:

காய்ச்சல் உள்ளதா என்பதை போல் முதுகுவலி இருக்கிறதா என்பதை அனைவரும் கேட்கிறோம். முதுகு வலி என்பது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை அதிகம் தாக்கி வந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முதுகு வலி ஏற்படுகிறது.

அதற்கு காரணம் உடலில் சத்துக்கள் இல்லாமல் இருந்தால் உடல் ரீதியான குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு மேல் முதுகு வலி ஏற்படும். முதுகு முதுகு தண்டுவடத்தில் கிருமித்தொற்றுகள் ஏற்பட்டால். அது புற்றுநோய், மேல் முதுகு வலியை ஏற்படுத்தும்.

மேல் முதுகுவலி வருவதற்கு முக்கிய காரணம் அதிகம் உடல் உழைப்புதான். குடும்பத்தை மேன்மை அடைய அதிகம் பேர் அதிகம் நேரம் உழைப்பார்கள். உழைக்கலாம் அதில் தவறுகள் இல்லை ஆனால் நாம் உடலுக்கு தேவையான உணவுகளையும் உட்கொண்ட பிறகு வேலை செய்யலாம். ஆனால் அதற்கென்று அதிகம் நேரம் ஓய்வெடுக்காமல் உழைத்தாலும் மேல் முதுகுவலி ஏற்படும்.

மேல் முதுகுவலியில் அடுத்ததாக பாதிக்கப்படுவது குழந்தைகள். ஏனென்றால் அவர்கள் இந்த காலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு அதிகம் புத்தகம் அதனை தூக்கி கொண்டு சில குழந்தைகள் பேருந்தில் செல்வார்கள், இன்னும் சில குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள். இதில் கல்லுரியில் படிக்குபவர்களும் அதிகம்  மேல் முதுகு வலி ஏற்பட காரங்கள்.

வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கும் முதுகு வலி ஏற்படும், ஆனால் அவர்களுக்கு  அதிகம் முதுகு வலி வரும். காரணம் வீட்டிற்கு பெண்களுக்கு ஒய்வு எடுப்பதும் இல்லை நாம் கொடுப்பதும் இல்லை. வேலை முடித்து வீட்டுக்கு சென்ற பின் நாம் ஒய்வு எடுப்போம் அவர்களுக்கு ஒய்வு எடுக்க நேரம் கிடைப்பதில்லை. இது போல் தொடர்ந்து வேலைபார்ப்பதால் அதிகம் நேரம் எடை முதுகில் சுமந்து வெளியில் செல்வதாலும். மேல் முதுகு வலி ஏற்பட காரணம் ஆகும்.