பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் நிதி நெருக்கடியால் பெண் வேடமிட்டு ஆண் கலந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி!

#world_news #Word
Mani
2 years ago
பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் நிதி நெருக்கடியால் பெண் வேடமிட்டு ஆண் கலந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி!

கென்யாவின் தலைநகரான நைரோபியில் சதுரங்கப் போட்டிகள் (chess kenya) கடந்த வாரம் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் நடக்கும் இந்தப் போட்டியில், இந்த ஆண்டு 22 நாடுகளைச் சேர்ந்த 400 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கான பிரிவில் 99 பேர் பதிவு செய்திருந்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இவர்களில் ஸ்டான்லி ஓமண்டி (வயது 25) என்பவரும் ஒருவர். ஆணான இவர், பெண்களுக்கான செஸ் போட்டியில் விளையாட தனது பெயரை மில்லிசென்ட் ஆவாவுர் என்ற பெயரில் பதிவு செய்து உள்ளார். போட்டி தினத்தன்று புர்கா அணிந்து, கண்ணாடி போட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பரிச்சயம் இல்லாத ஒருவர் தொடர்ந்து வெற்றியடைந்து வருவதைக் குறித்து, போட்டியை நடத்துபவர்கள் சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். 

இவர் கடுமையான போட்டியாளர்களையும் வெற்றி பெற்றதை கவனித்தோம். புதிய போட்டியாளர் ஒரு டோர்னமென்ட்டில் மிகவும் தைரியமாக விளையாடிப் பார்த்ததில்லை.

போட்டி முழுவதும் அவர் பேசவே இல்லை. டேக் (Tag) வாங்கிக் கொள்ளும்போது கூட அவர் பேசாததை கவனித்தோம். அவரின் காலணி ஆண்களுக்கானதாக இருந்தது. மிகவும் கடுமையான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவரை அழைத்தோம். அப்போதும் அவர் ஆச்சர்யப்படவில்லை.

இதனால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று அடையாள அட்டை போன்றவற்றை காட்ட சொல்லி கேட்டு உள்ளனர். அப்போது, அவர் பல்கலைக்கழக மாணவர் என்றும் நிதி நெருக்கடியால் இப்படி செயல்பட்டது பற்றி அவர்களிடம் கூறி உண்மையை ஒப்பு கொண்டு உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!