சீ ஷெல்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவைகள்!
#SriLanka
#Flight
#Airport
#Passport
#Passenger
Mayoorikka
2 years ago

சீ ஷெல்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க ஏர் சீ ஷெல்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாராந்திர விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீ ஷெல்ஸ் மற்றும் கொழும்புக்கு இடையில் வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான சேவைகளை மேற்கொள்ள ஏர் சீ ஷெல்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சீ ஷெல்ஸில் இருந்து கொழும்புக்கான முதலாவது விமானம் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறந்த சுற்றுலா, மருத்துவம் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை கொண்ட இடமாக இலங்கை இருக்கும் என ஏர் சீ ஷெல்ஸ் தெரிவித்துள்ளது.



