நாடு முழுவதும் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் சேவையில்!
#SriLanka
#Sri Lanka President
#Police
#Festival
#Lanka4
Mayoorikka
2 years ago
பண்டிகைக் காலத்தின் பின்னரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்காகவும் பொலிஸார் தொடர்ந்தும் சோதனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும்போது, அவதானத்துடன் செல்ல வேண்டும். வீதி விதிமுறைகளை உரியவாறு பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.