சீதுவ மற்றும் அஹுங்கல்ல ஆகிய இடங்களில் இருவர் சுட்டுக்கொலை

சீதுவ மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சீதுவ ராஜபக்சபுர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 29 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



