நம் நாட்டில் எளிதில் கிடைக்கும் அரச இலையின் மருத்துவப் பண்புகள்.

#ஆரோக்கியம் #மூலிகை #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #herbs #Antoni #Theva #Antoni Thevaraj
நம் நாட்டில் எளிதில் கிடைக்கும் அரச இலையின் மருத்துவப் பண்புகள்.

நம் நாட்டில் அரச மரம் பெரும்பாலும் கோவில்களில் காணலாம். இது சாதாரணமாக சாலை ஓரத்தில் அல்லது விட்டிலும் காணக்கூடிய எளிதில் கிடைக்கும் ஒரு மரமாகும். இதன் இலையின் ஆரோக்கிய நன்மைகளையே நாம் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

அரச இலையின் ஆரோக்கிய நன்மைகள்:

அரசமரம் அதிகளவு ஆக்சிஜனை கொடுக்கக்கூடியது. இதில் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த அரச இலைகளில் அதிகளவு “ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தியோனின், கிளைசின், அஸ்பார்டிக் அமிலம், டானிக் அமிலம்“ போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது மட்டுமின்றி அரசமரத்தின் ஒவ்வொரு பாகங்களும் பல நன்மைகளை கொடுக்கிறது.

  • அதிகளவு சளி தொல்லை உள்ளவர்கள் இந்த அரச இலையை பாலில் கலந்து கொதிக்க வைத்து தினமும் 2 முறை குடித்து வருவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். மேலும், காய்ச்சல் விரைவில் குணமாகும்.
     
  • சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த அரசமர காயை பொடி செய்து அதனுடன் கடுக்காய் பொடியை சமமான அளவு பாலில் கலந்து குடித்து வருவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைகிறது.
     
  • அரசமர விதையை பொடி செய்து அதை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. அதேபோல் இரத்தம் சுரக்க உதவுகிறது.
     
  • இந்த இலையுடன் தேன் கலந்து கஷாயம் போல் குடித்து வருவதால் இரைப்பை கோளாறுகள் நீங்கும்.
     
  • அரச இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது.
     
  • அரச இலையை பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு குணமாகும்.
     
  • இந்த இலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இரவு நேரங்களில் அரச இலையை தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் இதை குடித்து வர இதயம் படபடப்பு நீங்கும். இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
     
  • ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அரச இலையை காயவைத்து பொடியாக செய்து தினமும் நீரில் கலந்து குடித்து வருவதால் நல்ல பயன் கிடைக்கும்.
     
  • இந்த இலைகளை கற்கண்டுடன் சேர்த்து அரைத்து, அதை தினமும் நீரில் கலந்து குடித்து வர கல்லீரல் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
     
  • கண் வலிக்கு அரச இலையை கசக்கி போடுவதன் மூலம் நல்ல பலனளிக்கிறது.