இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான, சுதந்திரமான தீர்வு கிடைக்குமா ?

இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான, சுதந்திரமான தீர்வு கிடைக்குமா என்ற கேள்விக்கு
பதில் நிச்சயம் இல்லை என்பதுதான்
காரணம் முதலில் இலங்கையில் தமிழர்களுக்கோ ,சிங்களவர்களுக்கோ, தமிழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கோ இலங்கைக்குள் சுதந்திரமோ தீர்வோ கிடைக்கப்போவதில்லை. கிடைக்க அந்தந்த இன மத அரசியல்வாதிகளுமே காரணம்.
ஒவ்வொரு இனத்துக்கிடையும் எவ்விதமான முரண்பாடோ துவேசமோ இல்லை. இந்த அரசியல்வாதி மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் , மதங்களிடையேயும் துவேச ஆக்ரோஷ வார்த்தைகளை விதைத்து தமது அரசியல் வியாபாரத்தை செய்கிறார்கள்.
ஒருவேளை ஆழும் கட்சி ஒரு தீர்வை தமிழருக்கு வழங்க முன் வரும்பொழுது அப்பொழுது நடைமுறையில் இருக்கும் எதிர் கட்சியும் பிற ஆழும் கட்சிக்கு எதிராக நிற்பவர்களும் காரணம் இன்றி எதிர்ப்பார்கள்.
அத்தோடு பல சிங்கள, பௌத்த துறவிகளின் வார்த்தையை மதிப்பதால் அவர்களும் ஆழும் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
இப்படியெல்லாம் இருக்க என்ன தலைகீழாக நின்றாலும். தமிழர் தீர்வை எந்த ஆழும் கட்சியாலும் கொடுக்க முடியாது.
சிலவேளைகளில் அமெரிக்காவில் ஓபாமா ஆட்சிக்கு வந்ததுபோல ஒரு தமிழர் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் இருக்கும் கட்சிகளின் ஒற்றுமையீனத்தால் தமிழருக்கோ, மற்ற சிங்களவர்களுக்கோ, இஸ்லாமியர்களுக்கோ நல்ல தீர்வுகளை கொடுக்கப்போவதில்லை.
அப்படியானால் நாம் என்ன செய்யலாம்?
எதற்கும் ஒரு தீர்வு உண்டு.
அது அனைத்து மக்களுக்கும் நேர்மையானதாக இருக்கவேண்டும்.
ஆம்
கல்வியே ஆயுதம். அனைத்து மக்களும் தம் பிள்ளைகளை கல்வியில் முன்னிலைக்கு கொண்டுவரவேண்டும்.
அதிலும் மொழிக் கல்வி அத்தியாவசியம். அதிலும் மும்மொழி கல்வி சிறிபான்மை இனத்துக்கும் பெரும்பான்மை இனத்துக்கும் மிக மிக அவசியம்.
காரணம் எம்மவர்கள் தமது தொழிலை சிங்கள தேசத்தில் கூட செய்ய முடியும்.
அத்தோடு மொழி ஆற்றல் இருந்தால் யார் எம்மை துவேசமாக பார்க்கிறார்களோ அவர்களோடு பேசி நாம் யார் என்பதை நிரூபிக்க முடியும்.
அப்பொழுது எமக்குள் துவேசம் வேரறுக்கப்படும்.
கறுப்பின ஓபாமாவை அதிக வெள்ளையின அமெரிக்கர்கள் ஏற்றதுபோல சிங்களவர்களே தமிழர் ஒருவரையோ ஒரு இஸ்லாமியரையோ நாட்டை ஆழ அனுசரணை வழங்குவார்கள்.
அத்தோடு சிங்களவர்கள் ஒரு துவேசமான இனம் அல்ல. மக்கள் அனைவரும் நல்லவர்கள். அரசியலுக்காக மக்களை துவேசிகளாக்கி வைத்திருப்பதும். தமிழர். இஸ்லாமியர்கள் ஒரு சிங்கள துவேச பயங்கரவாதிகள் என பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.
ஆம் நாம் கல்வியால் நாட்டையும் மக்களையும் பெருமையாக ஆழ முடியும் ஏன் உலகையே ஆழ முடியும்.
இதை இஸ்லாமிய சகோதரர்கள் நன்கு புரிந்து அவர்களின் ஒவ்வொரு வீட்டிலும் முடிந்தவரை பன்மொழிக் கல்வியையும் பட்டதாரிகளையும் உருவாக்கி வெற்றிபெற்று வருகின்றனர்.



