இலங்கையின் வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புக்காக IMF மற்றும் உலக வங்கி பாராட்டு
IMF மற்றும் உலக வங்கி இலங்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி வசந்த மாநாட்டின் மூன்றாம் நாளில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.
இந்தியா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.
ஜப்பான் முன்னிலை பெற்றுள்ளது. ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி கலந்துரையாடல் சுற்றில் பங்கேற்கிறார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாரிஸ் கிளப்பின் டைரக்டர் ஜெனரல் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் பிரதிநிதியாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்து கொள்கிறார்.
காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை சார்பாக விசேட அறிக்கையொன்றையும் விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.