அமர்ந்திருப்பவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதால் உண்டாகவல்லது பக்கவாதம்.

#ஆரோக்கியம் #உடல் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Body #Antoni #Theva #Antoni Thevaraj
அமர்ந்திருப்பவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதால் உண்டாகவல்லது பக்கவாதம்.

இன்று யாரும் கதிரையில் அமரும் போது சாதாரணமாக அமர்ந்து கொள்வதில்லை. நாகரிகமாகவும் ஆடம்பரமாகவும் இருக்க கால் மேல் கால் போட்டு  அமருகிறார்கள்.

இவ்வாறு அமருவதை நம் முன்னோர்கள் கண்டிருந்தால் அப்படி அமராதே காலை கீழே போடு என்பார்கள். ஆனால் நாம் அவரை திமிர் பிடித்தவர்கள் என்றெல்லாம் கூறியிருப்போம். அவர்கள் எதையும் பிழையாக கூறியிருக்க மாட்டார்கள். அதற்கான காரணம் தான் என்னவென்பதை இந்தப்பதிவு தரவிருக்கிறது.

இரத்த அழுத்த பிரச்சனை:

கால்களை நீண்ட நேரம் ஊன்றி உட்கார்ந்தால் நரம்புகளில் அழுத்தம் கொடுப்பதால் இரத்தம் அழுத்தம் அதிகரிக்கிறது. உங்களுக்கு இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி கால் மேல் கால் போட்டு அமர்ந்து சாப்பிடாதீர்கள்.

வாதம் ஏற்படும்:

நீங்கள் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு உட்காருவது வாதம் அல்லது பெரோனியல் பக்க வாதத்தை ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்:

நீங்கள் காலை குறுக்கே போட்டு அமர்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை பெரிதும் பாதிக்கிறது. காலில் அழுத்தம் கொடுக்கும் போது இரத்த ஓட்டம் சீராக செல்லாது. 

இடுப்பில் வலியை ஏற்படுத்தும்:

கால் மேல கால் போட்டு அமருவதால் இரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன் மேலும் முதுகுப்புறம், இடுப்பு போன்ற இடங்களில் வலி உணரப்படும். அத்துடன் முள்ளந்தண்டும் நாளடைவில் பாதிக்ககூடும்.

கதிரை எவ்வாறானதாக இருந்தாலும் இருந்து வேலை செய்பவர்கள் தங்கள் இருக்கையை மாற்றி வேறுவிதமாக 3 மணிக்கொரு தடவை அமரவேண்டும். அதிலும் கால் மேல் போடுவதை தடுக்க வேண்டும்.

இல்லை நான் உட்காருவேன் என்று சொன்னால் மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் முடிந்தவரை கால் மேல் கால் போட்டு அமர்வதை தவிர்த்து விடவும்.