ரஷ்யாவில் 9 பேரை கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

#world_news #Russia
Mani
2 years ago
ரஷ்யாவில் 9 பேரை கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

மே 2021 இல் ரஷ்யாவின் கசானில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது, இதன் விளைவாக 7 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ​​பள்ளியின் முன்னாள் மாணவர் இல்னாஸ் கலியாயேவ் என்பவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதை இல்னாஸ் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!