நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதுவருட விசேட பூசை வழிபாடுகள்!
#SriLanka
#Jaffna
#sri lanka tamil news
#Nallur
#Temple
Mayoorikka
2 years ago

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக் கிழமை (14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



