அதிக வெப்பநிலையுடனான காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

#SriLanka #weather #Kilinochchi #hot #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
அதிக வெப்பநிலையுடனான காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்ட  எச்சரிக்கை

மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று  (14) அதிக வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அதிக தாகம் மற்றும் தசைப்பிடிப்பு போன்றன ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வயோதிபர்கள் மற்றும் நோய்க்குட்பட்டவர்களை வீட்டிற்குள்ளேயே தங்கவைக்குமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை கால்நடைகளை நிழலில் கட்டிவைக்குமாறும் கால்நடைகளுக்கு அதிகமாக தண்ணீரை வழங்குமாறும் மில்கோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!