தினமும் சூரியன் முன் நின்று சூரியநமஸ்காரம் செய்யுங்கள். அதன் பின் இவை உங்களுக்கு அமையும்.

#ஆரோக்கியம் #சூரியன் #உடற்பயிற்சி #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #sun #Antoni #Theva #Antoni Thevaraj
தினமும் சூரியன் முன் நின்று சூரியநமஸ்காரம் செய்யுங்கள். அதன் பின் இவை உங்களுக்கு அமையும்.

காலையில் உடற்பயிற்சி செய்தல் நன்று. அதிலும் சூரியன் முன் நின்று செய்யும் சூரிய நமஸ்காரத்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வந்து சேரும்.

சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது மற்றும் அதை செய்யும் முறையை பற்றியும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

சூரிய நமஸ்காரம்:

சூரியன் முன் நின்று செய்வதால் நமக்கு அதிலிருந்து விற்றமின் டி கிடைக்கிறது. சூரியன் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரிவிக்கத்தேவையில்லை. சூரிய நமஸ்காரம் அனைவரும் செய்யலாம் காலை மற்றும் மாலை வேளைகளில். கர்ப்பிணிகள் மட்டும் மருத்துவர் ஆலோசனையுடன் மேற்கொள்ளல் சிறந்தது.

சூரிய நமஸ்காரம் பெயர்கள்

  1. பிராணமாசனம்
  2. அஸ்ட உட்டனாசனம்
  3. அஸ்டபாதாசனம்
  4. ஏகபாதபிரஸர்நாசனம்
  5. தந்தாசனம்
  6. அஷ்டாங்க நமஸ்காரம்
  7. புஜங்காசனம்
  8. அதோ முக்கா ஸ்வானாசனம்
  9. அஸ்வ சஞ்சலாசனம்
  10. உட்டனாசனம்
  11. அஸ்ட உட்டனாசனம்
  12. பிராணமாசனம்

இரத்த ஓட்டத்தை சீராக்க:

சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இயங்குகிறது, அதனால் இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீங்குகிறது. எனவே இரத்த குழாய் அடைப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இதய துடிப்பை சீராக பராமரிக்கவும் உதவியாக இருக்கும்

பருமனாக உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் முக்கியமான ஒன்று சூரிய நமஸ்காரம். வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து போன்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும்.

மேலும் இது உங்கள் உடல் உறுப்புகளுக்கு வலிமை தருவதற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி வருகிறது.

மாதவிடாய் காலத்தில்:

பெண்களுக்கு உள்ள பெரும்பாலான பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது மாதவிடாய் சுழற்சி தான். ஆகையால் ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதில் தாமதம் வரும் போது, அதனை சரி செய்வதற்கு தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

நினைவாற்றல் அதிகரிக்க:

நரம்பு மண்டலத்தை சீராக இயங்க வைப்பதற்கு சூரிய நமஸ்காரத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று சொல்லலாம். நரம்புகளின் செயல்கள் சீராக இருப்பதால் மூளையின் வளர்ச்சிக்கும், நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவியாக உள்ளது.

சரும பொலிவிற்கு:

எந்த உடற்பயிற்சி செய்தாலுமே உடலுக்கு ஒரு கூடுதல் பொலிவு கிடைக்கும்.
அதிலும் இந்த உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. முக சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது.

நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க:

சூரிய நமஸ்கார உடற்பயிற்சி செய்வதால்  உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கவும், சீராக செயல்படவும் உதவுகிறது.
மேலும் தைராய்டு மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு சீராக இருப்பதால் பதட்டம் மற்றும் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.

தோல் வலிமை பெற:

சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகிறது. அதிலும் முக்கியமாக கழுத்து, தோல், மணிக்கட்டு, வயிறு பகுதியில் உள்ள தசைகள் வழுவடைவதற்கு உதவியாக இருக்கும்.