நம்மை அறியாமல் உடலில் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைக்கும் வழி முறைகள்.

#ஆரோக்கியம் #உப்பு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Salt #Antoni #Theva #Antoni Thevaraj
நம்மை அறியாமல் உடலில் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைக்கும் வழி முறைகள்.

நாளுக்கு நாள் வேலைகளும் வேலைப்பளு அதிகமாகவிருப்பதாலும் நாம் வீட்டில் சமைப்பது குறைவு அல்லது இல்லை எனலாம். அப்போது நாம் வெளியே பாஸ்ட் புட் கடைகளில் சாப்பிடும் போது அந்த உணவு வகைகளில் அதிக உப்பு சேர்ப்பதனால் நமது உடலிலும் அதிக உப்பு சேர்கிறது.

உப்பானது உடலில் அதிகரிப்பின் குருதிக்கலன்களில் கொலஸ்திரோலாக படிந்து உயர் இரத்த அழுத்தத்தினை உண்டு பண்ணலாம். ஆகவே இந்தப்பதிவில் நமக்கு மீறிய உப்பை குறைக்கும் வழி முறைகள் பற்றிப் பார்க்கலாம்.

சுரைக்காய் நன்மைகள்:

வாரம் மூன்று முதல் நான்கு நாட்கள் சுரைக்காய் கூட்டு வைத்து சாப்பிட்டால் போதும் உடலில் தேவையில்லதா உப்பை குறைக்கிறது. அதன் பின் 10 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்து பாருங்கள் உங்களுக்கு நன்மை தெரியும்.

நீர் சத்து உள்ள காய்கறி:

நீர் சத்து உள்ள காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் உப்பை குறைக்க முடியும் அதிலும் முக்கியமாக தர்பூசணி, கிர்ணி பழம், திராட்சை, வெள்ளரிக்காய் போன்ற பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அதேபோல் நீர் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், கோதுமை பிரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான உப்பை உடலிலிருந்து வெளியேற்ற முடியும். பச்சை காய்கறிகள், பழங்களை ஒரு நாளுக்கு இரண்டு கப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.

இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் நல்ல சத்துக்களை உடலில் தங்க வைக்கும், நீர் சத்துக்களை அதிகரித்து உப்பை குறைக்கும். காலை எழுந்து வேலைக்கு போய் விட்டு வந்தும், தூங்குவதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிக புரதம்

அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் இருந்தால் தேவையில்லாத பிரச்சனை நம்மை வந்தடையும். அதே போல் உடலில் புரதத்தின் அளவு குறைந்தால் உப்பு சத்துக்கள் அதிகமாகும் ஆகவே புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் உப்பை குறைக்க முடியும்.