வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி

#Disabled persons #music competion #Jaffna #pressmeet #Lanka4
Kanimoli
2 years ago
வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது.

சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் மங்கையர்க்கரசி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் குறித்த இசை போட்டிகள் இடம்பெற உள்ளன.

 இப்போட்டிகளில் பங்கெடுக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் போட்டி இடம்பெறுகின்ற தினத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையான காலப்பகுதியில் போட்டி இடம்பெறும் மண்டபத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

போட்டியாளர்கள் தனிப்பாடல், தனிவாத்திய இசைக்கே அனுமதிக்கப்படுவர்.

போட்டியாளர்கள் தமக்கு விருப்பமான ஏதாவது ஒரு பாடலினை (கர்நாடக சங்கீதம்/ திரையிசை/ மேலைத்தேயம்) 6 நிமிடங்களுக்குள் பாட இசைக்க முடியும்.

வாத்தியம் இசைப்போர் குறித்த குறித்த வாத்தியக்கருவியை கொண்டுவருதல் வேண்டும்.

போட்டி நிறைவுறும் வரை பாதுகாவலர் போட்டியாளருடனிருக்க வேண்டும். இப்போட்டிகளில் அனைத்துவிதமான மாற்றுத்திறனாளிகளும் வயது வேறுபாடின்றி பங்கெடுக்க முடியும் என இனனறு  யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!