இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

#Israel #Palestine
Mani
2 years ago
இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமீபகாலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ஜெருசலேம் பகுதியில் உள்ள ஒரு மசூதியை ராணுவம் தாக்கியதை அடுத்து இந்த மோதல் தீவிரமடைந்தது.

இந்நிலையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய ராணுவத்தினர் அங்கு சென்றனர்.

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துரதிஷ்டவசமாக அங்கிருந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் அங்கு மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!