கைதிகள் பரிமாற்றத்தில் 100 பேரை விடுவித்த உக்ரைன் மற்றும் ரஷ்யா

ரஷ்யாவுடனான சமீபத்திய கைதிகள் இடமாற்றத்தில் 20 பெண்கள் உட்பட மொத்தம் 100 உக்ரேனிய கைதிகள் விடுவிக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்களில் உக்ரைன் ராணுவ வீரர்கள், தேசிய காவலர்கள், கடற்படை வீரர்கள் மற்றும் எல்லைக் காவலர்களும் அடங்குவர் என்று உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவிததுள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்களில் சிலர் காயமடைந்தவர்கள் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடமாற்று ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைனால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய இராணுவத்தின் எண்ணிக்கை குறித்து அவர் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு இணங்க, கடுமையாக காயமடைந்த ஐந்து வீரர்களை உக்ரைன் ரஷ்யாவிடம் ஒப்படைத்ததாக போர்க் கைதிகளின் சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பு தலைமையகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2022 முதல், ரஷ்யாவுடன் கைதிகள் பரிமாற்றத்தின் விளைவாக 2,000 க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



