நமது அன்றாட உணவில் தவறும் விற்றமின் K யின் பயன்கள் இவை.

#ஆரோக்கியம் #விற்றமின் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Antoni #Theva #Antoni Thevaraj #vitamin
நமது அன்றாட உணவில் தவறும் விற்றமின் K யின் பயன்கள் இவை.

எவ்வளவு தான் நாம் போசாக்கான உணவை உட்கொண்டாலும், விற்றமின்கள் அதில் இல்லை அல்லது குறைவு என்றால் உடலில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். அத்தகைய விற்றமின்களில் விற்றமின் கேயும் இன்றியமையாததாகும். அதன் பயன்களையே இந்தப்பதிவு தரவுள்ளது.

கீரை:

கீரை என்றால்  அதிகளவு சத்துக்கள் காணப்படுவது இரும்பு சத்து தான். அதனால் தான் அதனை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். வைட்டமின் கே நிறைந்த பொருளில் மிகவும் முக்கியமான ஒன்று கீரை அதிலும் செங்கீரையில் தான் வைட்டமின் கே அதிகம் காணப்படுகிறது. இதனை சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள எலும்பு மற்றும் தசைக்கும் அதிகம் பலம் நிறைந்து இருக்கும். அரை கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் கே காணப்படுகிறது இது ஒரு நாளுக்கு தேவைப்படும் சத்துக்களை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

கருப்பு திராட்சை 

கருப்பு திராட்சைக்கு பெயர் கொடி முந்திரி என்று தமிழ் நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் அழைக்கப்படுகிறது. இந்த திராட்சையை தினமும் சேர்த்துக்கொள்வதால் இதில் உள்ள சத்துக்கள் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்களை உடலுக்கு தருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்களை மொத்தமாவும் தருகிறது.

துளசி நீர் பயன்கள்:

துளசி நீரில் அதிகளவு நீர் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதில் அதிகம் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனை தினசரி 1 டீஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்களை தரும்.

வெள்ளரிக்காய் பயன்கள்:

ஒரு வெள்ளரிக்காயில் 60% அளவுக்கு சத்துக்களை அளிக்கிறது.  அதுமட்டுமில்லாமல் பச்சை முட்டை கோஸ், முட்டை, ப்ரோக்கோலி, தாவர எண்ணெய், நட்ஸ் வகைகள் போன்ற அனைத்திலும் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.