அமெரிக்காவில் வங்கியில் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
#America
#Bank
Mani
2 years ago
-1-1.jpg)
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரின் கிழக்கு பிரதான தெருவில் உள்ள வங்கியில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் பலர் காயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுட்டதாகக் கூறப்படும் நபரும் உயிரிழந்தார். இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட அந்த பகுதி போலீசார், அந்த வழியாக செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.



