உலகிலேயே விலை உயர்ந்த கார் பதிவெண்: ரூ.122 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்
#world_news
#Dubai
Mani
2 years ago

துபாயில் நடந்த அறக்கட்டளை ஏலத்தில் P7 என்ற கார் பதிவெண் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் விலை உயர்ந்த கார் பதிவெண்ணாக கின்னஸ் சாதனை படைத்தது P7.
துபாயின் 'மோஸ்ட் நோபல் நம்பர்ஸ்' ஏலத்தில் கார் நம்பர் பிளேட் P7 55 மில்லியன் திர்ஹாம்களுக்கு (சுமார் ரூ. 122 கோடி) விற்கப்பட்டது. 15 மில்லியன் திர்ஹாமிற்கு தொடங்கிய ஏலம் சில நொடிகளில் 30 மில்லியன் திர்ஹாம்களுக்கு மேல் உயர்ந்தது.
ஒரு கட்டத்தில் 35 மில்லியன் திர்ஹாம்களை எட்டியது ஏலம். இதனால் சிறிது நேரம் ஏலம் நிறுத்தப்பட்டது.



