பாகிஸ்தான் பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது

#Pakistan #PrimeMinister #Arrest #Afghanistan #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
பாகிஸ்தான் பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்தார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

உடனே அந்த வாலிபர் இஸ்லாமாபாத் போலீசாரின் பயங்கரவாத எதிர்ப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் 

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்றும் அவர் மூன்று வெவ்வேறு பாதைகள் வழியாக பிரதமர் வீட்டுக்குள் நுழைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

அவரிடம் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நபர், அதிக பாதுகாப்புள்ள பிரதமர் இல்லத்துக்குள் எப்படி நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. 

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தலிபான்-பாகிஸ்தான் அமைப்பினர் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!