அமெரிக்காவில் Tesla வாகனங்களின் விலை சடுதியாக குறைப்பு

#America #Tesla #company #prices #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
அமெரிக்காவில் Tesla வாகனங்களின் விலை சடுதியாக குறைப்பு

அமெரிக்காவில் Tesla மின்வாகனங்களின் விலை 2 முதல் 6 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tesla நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலைக் குறைப்பு நிறுவனத்தின் இலாபத்தைப் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாண்டில் இதுவரை Tesla அதன் வாகனங்களின் விலையை ஐந்து முறை குறைத்திருக்கிறது.

நிறுவனம் மீண்டும் விலையைக் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, சீனா போன்ற இடங்களில் வாகனங்களின் விலை குறைக்கப்பட்டது அவற்றின் விற்பனையை அதிகரிக்கவே என்று நம்பப்படுகிறது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கையை Tesla வெளியிட்டது. 

சென்ற காலாண்டில் நிறுவனம் சுமார் 423,000 வாகனங்களை விற்றுள்ளது. அது அதற்கு முந்திய காலாண்டைவிடக் கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!