இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு இந்திய பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு, அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதன்படி அடுத்த மாதம் (மே) 6ஆம் தேதி மூன்றாம் சார்லஸ் மன்னரின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெற உள்ளது.
லண்டன் தலைநகரில் நடைபெறும் இந்த ஆடம்பர விழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் மஞ்சு மாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. சிறந்த தொண்டு பணிகளுக்காக பிரிட்டிஷ் எம்பயர் மெடல் பெறுபவராக மஞ்சு மாலிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைப் போன்று பிரிட்டிஷ் எம்பயர் மெடல் பெற்ற 800 தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பு விருந்தினர்களாக முடிசூட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள முதியோர் தொண்டு நிறுவனத்தில் சமையல்காரராகப் பணிபுரியும் மஞ்சு மாலி, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது முதியோர்களுக்குச் செய்த சேவைக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியால் பிரிட்டிஷ் பேரரசு பதக்க விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



