அமெரிக்காவில் 138 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை

#America #Baby_Born #Women #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
அமெரிக்காவில் 138 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் 138 ஆண்டுகள் கழித்து ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதமையினால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மாதம் கரோலின் கிளார்க் (Carolyn Clark), ஆண்ட்ரூ கிளார்க் (Andrew Clark) தம்பதியின் 2ஆவது பிள்ளை பெண் பிள்ளையாகப் பிறந்தது.

ஆண்ட்ரூ கிளார்க்கின் குடும்பத்தில் கடந்த 138 ஆண்டுகளாகப் பெண் பிள்ளைகளே பிறக்கவில்லை என்று People இணையவாசல் கூறியது.

அதை முதலில் கேட்டபோது ஆச்சரியமாக இருந்ததாகக் கரோலின் குறிப்பிட்டார்.

சென்ற செப்டம்பர் மாதம் பிள்ளையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளும் கொண்டாட்டத்தை அவர்கள் நடத்தினர்.

அப்போதுதான் பிறக்கப்போவது பெண் குழந்தை என அனைவரும் தெரிந்துகொண்டதாக People குறிப்பிட்டது.

பெண் குழந்தை ஆட்ரி (Audrey) சென்ற மாதம் 17ஆம் தேதி ஆரோக்கியமாகப் பிறந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!