இஸ்ரேலில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை
#Israel
#Attack
#Death
#Terrorist
#GunShoot
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலஸ்தீன பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசினார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படையினர் காசா நகரத்தின் மீதும், அண்டை நாடான தெற்கு லெபனானிலும் வான்வெளி தாக்குதலை நடத்தியது. குண்டுகளை வீசியதால் காசா நகர கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது.
இந்த நிலையில் மேற்கு கரை பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த 2 பெண்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.



