பாதுகாப்பு கருதி ரகசிய பயணங்களை மேற்கொள்ளும் புடின்

#Security #Travel #Russia #President #Putin #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
பாதுகாப்பு கருதி ரகசிய பயணங்களை மேற்கொள்ளும் புடின்

ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக அவர் கூறினார். 

பெரும்பாலும் புதின் தனது வீட்டிலே மறைந்து வாழ்வதாகவும், பல நகரங்களில் ரகசிய அலுவலகங்களை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆகவே ரகசியமான ரயில் நெட்வொர்க், பல நகரங்களில் ரகசிய அலுவலகங்கள், தாமாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை புதின் மேற்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், புடின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் உயிர் பயத்தில் ரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் புடின் ரகசிய ரயிலில் பயணம் செய்து வருவதாக ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரி க்ளெவ் கரகுலேவ் தெரிவித்துள்ளார். 

விமானத்தை எளிதாக ட்ராக் செய்ய முடியும் என்பதால் ரயிலில் பயணம் செய்வதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!