சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகரை சந்தித்த தைவான் ஜனாதிபதி

சீனா தைவான் நாட்டை தன்னுடன் இணைத்துக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனால் இருநாட்டுக்கும் இடையே சமீப காலமாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆனால் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக தனது நாட்டின் முக்கிய தலைவர்களை அங்கு அனுப்பி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் கடல் பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய சபாநாயகரான கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவிற்கு வந்துள்ளார்.
இந்த சந்திப்பு நடைபெறக்கூடாது என ஏற்கனவே சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் இருவரும் சந்தித்து பேசி உள்ளனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது “தைவான் மீதான சீனாவின் அச்சுறுத்தலை ஒப்புக் கொள்வதாகவும், தைவானுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உண்டு என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த செயலால் சீனா மிகுந்த கோபத்தில் உள்ளது.



