பணி நீக்கத்திற்கு எதிராக இங்கிலாந்தில் கூகுள் ஊழியர்கள் போராட்டம்

#England #Protest #google #Employees #LayOff #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
பணி நீக்கத்திற்கு எதிராக இங்கிலாந்தில் கூகுள் ஊழியர்கள் போராட்டம்

இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!