வாகன நெரிசலை குறைக்க யாழ் நகரில் விசேட வேலைத்திட்டம்!
#SriLanka
#Jaffna
#Police
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ் நகரில் பொருட்களை கொள்வனவு செய்யும் முகமாக பொதுமக்களின் நடமாட்டம் அதிக ளவில் காணப்படுவதோடு நகரப் பகுதியில் வாகனங்களினை நிறுத்துவதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமையினைகட்டுப்படுத்தும் முகமாக யாழ் மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிசார் யாழ் மாநகர சபையுடன் இணைந்து யாழ்நகரில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பொருட் கொள்வனவிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வாகன தரிப்பித்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரம் வாகனங்களைநிறுத்த முடியும் என ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்படுகிறது
போக்குவரத்து பொலிசார் நகர பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களினை வாகன நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.



