உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த பின் உயிரிழந்த ஸ்காட்லாந்து பெண்

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஷனான் போவ் என்பவர் துருக்கியில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். இவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று இரைப்பை பேண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த இரைப்பை பேண்ட் அறுவை சிகிச்சை என்பது உணவு உட்கொள்ளும் அளவை குறைக்க வயிற்றின் மேல் பகுதியில் போடப்படும் பேண்ட் ஆகும். இந்த அறுவை சிகிச்சையின் போது அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியினை வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதனை அடுத்து அவர் கூறியதாவது “துருக்கி நாட்டில் இறந்த ஒரு பிரிட்டிஷ் நாட்டவரின் குடும்பத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஷனான் போவின் காதலனான ரோஸ் ஸ்டிர்லிங் தனது காதலிக்கு பேஸ்புக் மூலமாக அஞ்சலி செலுத்தி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது “என் தேவதையே தூங்கு. என்றென்றும் எப்போதும் உன்னை நான் நேசிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.



