மாற்று வீரராக IPL தொடரில் இடம்பிடித்த தசுன் ஷானக
#India
#IPL2023
#T20
#Srilanka Cricket
#Player
#Tamilnews
#Sports News
#Lanka4
Prasu
2 years ago

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் தசுன் சானகா ஒப்பந்தம் செய்துள்ளார்.
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கேன் வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்துடனான டி20 தொடரை முடித்த சானகா, கடந்த ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார்.
அறிமுக ஐபிஎல் போட்டியில் இணையவுள்ள தசுன் சானக, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் 50 லட்சம் இந்திய ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.



