இலங்கையை அயல் நாட்டு உளவுப்படைகளும் தீவிரவாத குழுக்களும் தமது உளவு மையமாக பயன்படுத்துகின்றார்களா?

#SriLanka #Investigation #Investigations #India #Tourist #Terrorist #Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கையை  அயல் நாட்டு உளவுப்படைகளும்  தீவிரவாத  குழுக்களும் தமது உளவு மையமாக பயன்படுத்துகின்றார்களா?

இலங்கைக்குள் தற்பொழுது இறுக்கமான சட்டங்கள் இல்லாத காரணத்தினால்  அயல் நாட்டு உளவுப்படைகள் மற்றும்   தீவிரவாத  குழுக்களும் தமது உளவு நடவடிக்கைகளுக்கு இலங்கையை பயன்படுத்தும் சூழல் காணப்படுவதாக புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில்  கட்டாயம் இறுக்கமான சட்டம் தேவை.   தற்பொழுது   வல்லரசு நாடுகளின்  உளவு பார்க்கும் படைகளும் இப்பொழுது இலங்கையில் அடுத்த நாடுகள் என்ன செய்கின்றன    என உளவு பார்க்க நுழைந்தும் நுழைந்து கொண்டும் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

அத்தோடு இந்து இஸ்லாமிய அண்டைய நாட்டு பழைய மற்றும் புதிய தீவிரவாதக் கும்பல்கள்  நாட்டுக்குள் தமது திட்டங்களை வகுக்கின்றது.   குறிப்பாக இந்த தீவிரவாத கும்பல்கள்   உல்லாச  பிரயாணிகள் போல இலங்கைக்குள் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் உளவாளிகளும் வேறு வேறு நாடுகளில் இருந்து வந்து இலங்கையில் ஒன்றுகூடுவதாகவும் சில நல்ல கெட்ட திட்டங்களை தீட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் சில புலனாய்வு செய்திகள் கூறுகின்றன. 

அதனால் இறுக்கமான பயங்கரவாத சட்டம் அல்லாது ஒரு தீவிர புலனாய்வு திறன் மூலம்   நாட்டையும் மக்களையும் காக்க இலங்கைக்கு அவசியமான சூழல் ஒன்று தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!