திறந்த பல்கலைக்கழகத்துக்கான கட்டணம் அதிகரிப்பு! வீதியில் இறங்கி போராடவுள்ளதாக எச்சரிக்கை
#SriLanka
#Protest
#prices
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

சிறிலங்காவின் திறந்த பல்கலைக்கழகத்துக்கான கட்டணம் 55 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தலைவர் முஹம்மது றிபாத், இதற்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்குள் இன்று நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. பாடநெறிகளின் கட்டணங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மூன்று வருட காலத்துக்குரிய பாடங்கள் தற்போது இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



