பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடித்தே ஆக வேண்டும்: சுமந்திரன்

புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
நேற்று சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொணடபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் ஒன்று இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



