அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் கறுப்புக் கொடி கட்ட தடை
#black flag
#Health
#Health Department
#strike
#Lanka4
Kanimoli
2 years ago

அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கறுப்புக் கொடிகள் கட்டப்படுவதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன நிலை மோசமடையும் என சுகாதார அமைச்சு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்சார் நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாடி முடிவெடுப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.



