நாடு முழுவதும் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படும்: புவியியல் துறை பேராசிரியர்

கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகள் உட்பட நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத இடங்களில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டும் என புவியியல் துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும், எனவே அது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.
இந்த அதிர்வு அளவீடுகளை பொருத்துவது மட்டுமின்றி இந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பற்றிய தரவு சேகரிப்பும் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
1966ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இலங்கையில் கொழும்பில் இருந்து நாட்டின் உள்பகுதி வரை பூமிக்கடியில் செல்லும் அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது செயற்கைக்கோள்களால் அடையாளம் காணப்படாததாகவும், இது போன்ற விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.



