வெடுக்குநாறி மலைத் சைவத் திருவுருவ மீளமைப்பு தொடர்பாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவிப்பு!

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவு
ஒலிமடு நிலதாரிப் பிரிவில் உள்ள
வெடுக்குநாறி மலை அருள்மிகு ஆதி சிவன் கோயிலில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்ச்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
26.03.2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் சைவ சமய நிகழ்ச்சி கலந்துகொண்டிருந்தபோது,
வெடுக்குநாறி மலை அருள்மிகு ஆதி சிவன் திருக்கோயிலின் திருவுருவங்கள் அனைத்தும் சுக்கு நூறாக்கப்பட்டன என்ற செய்தி என் ஆழ் உள்ளத்தைச் சுக்கு நூறாக உடைத்து உடலெங்கும் தீயாகியது.
26.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீதியில் 20-25 பேர் தட்டிகளுடன் நின்றோம்.
வெடுக்கு நாறிமலையில் தொடுக்கிறாயா போர்?
வெடுக்குநாறி மலையில் இடுக்கண் களைவோம்.
வெடுக்கு நாறி மலையில் கொடுக்கு வாளா?
வெடுக்குநாறி மலையில் அடுக்கடுக்காகத் துயரா?
வெடுக்குநாறி மலையில் ஒடுக்குகிறாயா சைவர்களை?
என முழங்கினோம். அப்பர் பெருமானின் தேவாரங்களைப் பாடிப் போராடினோம்.
அன்று இரவு 9:30 மணியளவில் கொழும்பிலிருந்து குடியரசுத் தலைவர் சார்ந்தவர் என்னை அழைத்துப் பேசினார். அப்போது கொடுமை நடந்து விட்டது. நடப்பது நன்மையாக நல்லதாகட்டும் என்றேன்.
வெடுக்குநாறி மலையில் அருள்மிகு ஆதி சிவன் கோயில் வழிபாடுகளைத் தொடர வேண்டும்.
இடிப்பதற்கு முன் எவ்வாறு இருந்ததோ அவ்வாறு அரசே மீளமைத்துக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டேன்
அதற்கான காரணங்களை அவர்களுக்கு அடுக்கினேன்.
Vavuniya district
Vavuniya north division
Olimadu - Vedkunaari hill
Hindu temple.
1 Declared archaeological site
2 Case regarding Hindu Poosai activities at Vavuniya courts
3 Hindu structures vandalised and desecrated on 26th March 2023
4 Status quo disturbed. Hindus in Sri Lanka and India (North) thoroughly upset. Resorting to protests demonstrations and representations.
5 Restoring status quo towards religious peace and harmony is the priority.
6 Restoration by individuals of private groups or organisations will create a law and order situation furthering tensions and agitations.
7 (a) economic recovery
(b) international relations particularly with North India
(c) LLRC recommendations not to create fresh racial religious or linguistic wounds / irritations
(d) engaging the Hindus outside Tamil politics.
These are priorities.
Efficient governance require immediate restoration of the status quo by a symbolic gesture of planting a sacred Siva lingam at the site by the government and beefing up the security to prevent further damage.
8 This will silence and smoothen all sectors and stakeholders. Normalcy will return soonest. Status quo restoration will strengthen the case for peace and harmony at the courts.
இருந்ததை இருந்த வாறே அரசு மீளமைக்கும் என என்னிடம் சொன்னார்கள்.
மறுநாள் காலை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் குடியரசுத் தலைவர் பேசியதாகவும் இருந்ததை இருந்தவாறே மீளமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் ஊடகங்கள் கூறின. மகிழ்ச்சி அடைந்தேன்.
அன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டத்திலும் வெடுக்குநாறி அருள்மிகு ஆதி சிவன் கோயில் இடிபாடுகளைப் பேசியதாகவும் இருந்ததை இருந்தவாறே அமைத்துக் கொடுக்க அரசு முன்வந்துள்ளதாகவும் மாண்புமிகு அமைச்சர்கள் தேவானந்தாவும் தொண்டமானும் செய்தி வெளியிட்டனர். மகிழ்ச்சி அடைந்தேன்.
இருந்ததை இருந்து வாறே அமைக்க நாள் குறிக்குமாறு மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவுக்குத் தெரிவித்தேன்.
பங்குனி உத்தர நாளில் 6.04.2023 குடமுழுக்கு நீராட்டு நிகழ்த்த வேண்டும் எனவும் கேட்டிருந்தேன்.
போதி மரத்தான் சொன்ன அறம் பெருக, நீதி அறத்தோடு நிமிர்ந்து நிற்க, வெடுக்குநாறி ஆதி சிவனை அரசே மீளமைக்கத் தேவானந்தா தேதி குறிக்க வேண்டும் அவராலே முடியும்.
தொங்கும் சிக்கல் வெடுக்குநாறி ஆதிசிவன் உடைப்பு
எங்கும் கலக்கம் எங்கும் கலவரத் தூண்டல், பங்குனி உத்திரம் நல்ல நாள் (06.04.2023) தேவானந்தா
அங்கு நீ செல்க அழித்த கோயிலை மீளமைக்க.
கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்களை 31.3.2023 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். சிவலிங்கங்களைத் தூக்கக் கூடிய பாரம் தூக்கிகள் தொடர்பாகத் தன்னிடம் மாண்புமிகு அமைச்சர் தொண்டமான் கேட்டதாக என்னிடம் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை 31.03.2023 அமைச்சர் தொண்டமான் வெடுக்குநாறி மலைக்கு வருவதாகத் தன்னிடம் சொன்னதாகவும் திரு. சிறீதரன் என்னிடம் தெரிவித்தார்.
01.04.2023 காலை திரு ஆறு திருமுருகன் அவர்கள் என்னை அழைத்தார்கள். ஏழு இலட்சம் ரூபாய் செலவில் உடைந்த ஒவ்வொரு திருஉருவத்தையும் வெடுக்குநாறி மலைக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் பேசிய பின்னர் வெடுக்குநாறியிலிருந்து திரு பூபாலசிங்கம் என்னை அழைத்துப் பேசினார்.
தொல்பொருள் திணைக்களம் வெடுக்குநாறி மலையில் எந்த மாற்றத்தையும் ஒப்பவில்லை எனத் தெரிவித்தார்.
மாற்றம் செய்ய முனைந்த மூவர் தடுப்பில், உழவுந்தும் தடுப்பில், தடுப்பிலிட்ட மூவரும் இரவு 10 மணி அளவில் விடுவிப்பு என
02.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஊடகங்கள் கூறின.
1. பல்லாண்டு காலமாக வெடுக்குநாறி மலை தொல்பொருள் திணைக்கள மேற்பார்வையில்.
2. வெடுக்குநாறி மலை அருள்மிகு ஆதி சிவன் கோயில் பூசை வழிபாடுகளுக்குத் தடை கோரிய வழக்கு வவுனியா நீதிமன்றத்தில்.
3. போருக்கு முன்பு இருந்த நிலை தெரியவில்லை.
4. அண்மைக் காலத்தில் சைவ சமயிகள் சார்பில் திருவுருவ அமைப்பும் பூசை வழிபாடும் 2016உக்குப் பின்னரே.
2023 திருஉருவச் சுக்கு நூறாக்கலுக்குப் பொறுப்பு பாதுகாப்பின்மை.
பொதுவான பாதுகாப்புக்குப் பொறுப்பு அரசு. திருக்கோயில் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருக்க வேண்டியவர் திருக்கோயிலாரே.
திருவுருவச் சுக்கு நூறாக்கல் அரசுக்கும் தெரியாமல் திருக்கோயிலருக்கும் தெரியாமல் நிகழ்ந்தது.
அரசு பொதுப் பாதுகாப்புக்கு பொறுப்பு என்பதால் திருவுருவங்களை மீளமைக்கும் பொறுப்பு அரசுக்கே உரியது. தொல்பொருள் திணைக்கள மேற்பார்வை அங்கு இருப்பதால் அவர்களை மீறித் திருவுருவங்களை மீளமைக்க அரசு உடன்படாது.
தொல்பொருள் திணைக்கள ஒப்புதல் உடன் இருந்ததை இருந்து வாரே மீளமைத்துத் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன்.
அரசை மீளமைக்க வலியுறுத்துவதே சைவ மக்களின் கடமை. அதற்கான வழிகளைப் படிமுறையில் நாடிக் கொண்டிருக்கிறேன்.
அருள்மிகு ஆதி சிவனின் அருளை நாடி நிற்கிறேன் - என குறிப்பிட்டுள்ளார்.



