Bigmatch ஆர்ப்பாட்டங்கள் பற்றி கல்வி அமைச்சின் கவனம்

வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன பேரணிகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, வருடாந்த பாடசாலை கிரிக்கட் போட்டிகளுடன் இணைந்து நடத்தப்படும் வாகன பேரணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்தியுள்ளது.
பாடசாலை மாணவர்கள் குழுவொன்று நேற்று பதுளை நகருக்கு வாகன பேரணியில் வந்த போது, அவர்களை வழிமறிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த மாணவர்கள் கவனக்குறைவாக காலி இடத்தில் வாகன பேரணியை நடத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த மாணவரும் படுகாயம் அடைந்தார்.
அவரும் ஜீப்பில் பயணித்த ஒன்பது மாணவர்களும் சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பதுளை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.



