வரி விதிப்பால் 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வருமான வரி அறவிடும் கொள்கையினால் சுமார் எழுநூறு அரச வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களில் விசேட வைத்தியர்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு குறித்து பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்திய வேளையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு வைத்தியர்கள் நால்வரும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் திரு.அலுத்கே தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு முன்னெப்போதும் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனது கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.



