சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய போப் பிரான்சிஸ்

#Pop Francis #Hospital #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 86), சமீப காலமாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். மூச்சு விடுவதில் சிரமப்படும் அவருக்கு சுவாச தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை அவர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதில் அவரது உடல் நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று (சனிக்கிழமை) 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி நேற்று தெரிவித்தார். 

போப் பிரான்சிசின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், நேற்று முன்தினம் இரவு உணவுக்கு அவர் பீட்சா சாப்பிட்டதாகவும் மேட்டியோ புருனி கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!