சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

#SouthAfrica #Gold #Mine #Accident #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. 

இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!