ஈழத்து மண்ணின் வேம்படி மகளீர் கல்லூரி பற்றி சில பெண்களின் உரையாடல்

ஈழத்து மண்ணின் வடக்கின் தமிழ் முண்ணனி பெண் பிள்ளைகளின் பாடசாலையின் அவலம் யாரோடு நோவோம் ...
வேம்படி மகளீர் கல்லூரி பற்றி சில பெண்களின் உரையாடல் என்காதில் கேட்டவற்றை உங்களுக்கும் சொல்றன்.
உண்மை பொய் பற்றி கொமன்றில் போடுங்கோ. எங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலம்.பிள்ளைகள் வீட்டில் வந்து சொல்வது பற்றி ஒரு உரையாடலே.
காலை வகுப்பில் கதிரை தேடுவதே பெரிய வேலையாம். நிரந்தரமாக ஒரு வகுப்பறையும் இல்லையாம்.
கட்டிடங்கள் விழும் நிலையில் இருக்காம். யாரும் அதை கவனிப்பாரில்லையாம்,
கன்ரினே இல்லையாம், பெண்பிள்ளைகளின் இயற்கை உடலியல் பிரச்சினையின் போது சுடுதண்ணீர்கூட குடிக்க கஸ்டமாம்.
வீட்ட காலை சாப்பிடாமல் போனால் அன்றய நாள் சாப்பாடே இல்லைத்தானாம்.
இப்படி ஒரு தேசிய பாடசாலை இருப்பதாக அந்த பெண்கள் பேசிக்கொண்டார்கள்.
எனக்குள் சிலகேள்வி,இந்த பாடசாலையை வலயம் பார்க்காதா?பழைய மாணவிகள் கவனிப்பதில்லையா?
பெரிய பெரிய ஆட்களின் பிள்ளைகள் கூட படிக்கும் போது இப்படி இந்த பாடசாலை இப்படி போகலாமா?
இந்த பாடசாலை யாழ்ப்பாணத்தின் அடையாளத்தின் ஒன்று அதனை பற்றி பேசாமல் விடலாமா?
தவறு என்றால் சொல்லுங்கோ. இல்லாட்டா பாடசலையை சீராக்குங்கோ.



