நான் ராஜபக்ஷக்களின் அடிமை இல்லை: சமன்லால்
தன்னை பொதுஜன பெரமுனவில் இருந்து துரத்த பசில் ராஜபக்ஷவினால் முடியாது எனவும் தான் ராஜபக்ஷக்களின் அடிமை இல்லை எனவும் மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் திரு சமன்லால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை அல்ல, மஹிந்த ராஜபக்ஷ என்ன சொல்லியிருப்பார் என்பதை முகத்துக்கு நேரே சொல்வேன் என்றும் அவர் கூறுகிறார்.
பசில் ராஜபக்ச அரசியலை விட்டாலும், அவர் அரசியலை விட்டு விலகும் மனிதரல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் பசில் ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றத்தின் ஒலிப்பதிவை வெளியிட்டது யார் என்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்குள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதனை மோசமான ஒருவரால் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.